ஓடிடியில் அசுரன் திரைப்படத்தின் தெலுங்கு ரீமேக் வெளியாக உள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.
வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் வெளியாகி மாபெரும் வெற்றி படமாக அமைந்த அசுரன் படத்தை தெலுங்கில் நாரப்பா என்ற பெயரில் உருவாகி வருகிறது. இந்தப்படத்தில் வெங்கடேஷ் தனுஷ் கதாபாத்திரத்தை ஏற்று நடிக்கிறார். இந்தப் படம் நேரடியாக ஓடிடி அமேசான் ப்ரைமில் வெளியாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று படக்குழுவினர் தெரிவித்துள்ளனர். இந்த படத்தில் மஞ்சுவாரியர் கதாபாத்திரத்தில் பிரியாமணி நடித்துள்ளார் படத்திற்கு மணிசர்மா இசை அமைத்திருக்கிறார்.