நடிகர் விக்ரம் நடிப்பில் உருவாகியுள்ள கோப்ரா திரைப்படம் ஓடிடியில் வெளியாகும் என தகவல் பரவி வருகிறது.
தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகனாக வலம் வரும் விக்ரம் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் கோப்ரா. இந்த படத்தை டிமான்டி காலனி, இமைக்கா நொடிகள் உள்ளிட்ட படங்களை இயக்கிய அஜய் ஞானமுத்து இயக்குகிறார். செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோ நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். சமீபத்தில் கோப்ரா படத்தை பிரபல ஓடிடி தளம் வாங்கி இருப்பதாக தகவல்கள் பரவி வந்தது. இப்போது வரக்கூடிய சில திரைப்படங்கள் நேரடியாக அமேசான், ஹாட்ஸ்டார் போன்ற தளங்களில் வெளியாகிறது .
Fake News !! https://t.co/RCbW2EuSZH
— Seven Screen Studio (@7screenstudio) April 10, 2021
மேலும் சில படங்கள் திரையரங்குகளில் வெளியான பின் இந்த தளங்களில் ஒளிபரப்பாகி வருகிறது . இந்நிலையில் கோப்ரா படத்தின் ஓடிடி உரிமையை நெட்ப்ளிக்ஸ் வாங்கியிருப்பதாக பரவிய தகவலுக்கு தயாரிப்பு நிறுவனம் விளக்கமளித்துள்ளது. இதுகுறித்து 7 ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் நிறுவனம் தனது ட்விட்டர் பக்கத்தில் இது ஒரு பொய்யான தகவல் என அறிவித்துள்ளது. விரைவில் கோப்ரா படத்தின் ரிலீஸ் குறித்த தகவல்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.