இயக்குனர் செல்வராகவன் இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடித்துள்ள திரைப்படம் நானே வருவேன். இந்த படத்தில் நடிகர் தனுஷ் இரட்டை வேடத்தில் நடித்துள்ளார் அவருக்கு ஜோடியாக நடிகை இந்துஜா ரவிச்சந்திரன் நடித்திருக்கின்றார். வி கிரியேஷன்ஸ் சார்பில் கலைப்புலி எஸ். தானு தயாரித்துள்ள இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருக்கிறார். இந்த படத்தில் யோகி பாபு, பிரபு, எல்லி அவுரம் என்ற ஸ்வீடன் நாட்டு நடிகை உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
நானே வருவேன் திரைப்படம் செப்டம்பர் 29ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்த சூழலில் இந்த படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி பற்றிய அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. அதன்படி இந்த படம் அமேசான் ப்ரைம் ஓடிடி தளத்தில் வரும் அக்டோபர் 27ஆம் தேதி வெளியாக இருக்கிறது. இதனை போஸ்டர் ஒன்றை வெளியிட்டு ஓடிடி தளம் அறிவித்து இருக்கிறது இதனால் ரசிகர்கள் மிகுந்த மகிழ்ச்சியில் இருக்கின்றனர்.