Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

ஓடிடியில் வெளியான ‘ராதே’… செம மாஸ் சாதனை… சல்மான் கானின் நெகிழ்ச்சி பதிவு…!!!

ஓடிடியில் வெளியான சல்மான் கானின் ராதே படத்தை ஒரே நாளில் 42 லட்சம் பேர் பார்த்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

பிரபல பாலிவுட் நடிகர் சல்மான் கான் நடிப்பில் பிரபுதேவா இயக்கத்தில் உருவான ராதே படம் கடந்த மே-13ஆம் தேதி நேரடியாக ஸீ பிளஸ் ஓடிடியில் வெளியானது. இந்த படத்தில் திஷா பதானி, பரத், மேகா ஆகாஷ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். மேலும் இந்த படத்திற்கு ரசிகர்களிடையே கலவையான விமர்சனங்கள் கிடைத்து வருகிறது.

இந்நிலையில் முதல் நாளில் மட்டும் ராதே படத்தை ஓடிடியில் 42 லட்சம் பேர் பார்த்துள்ளதாக ஸீ நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இதுகுறித்து நடிகர் சல்மான்கான் தனது டுவிட்டர் பக்கத்தில் ‘முதல் நாளே அதிகம் பார்க்கப்பட்ட படம் என்கிற பெருமையை ராதே படத்திற்கு தந்த அனைவருக்கும் நன்றி. உங்கள் அன்பு மற்றும் ஆதரவு இல்லாமல் திரையுலகம் பிழைக்காது . நன்றி’ என பதிவிட்டுள்ளார்.

Categories

Tech |