தமிழ் திரையுலகில் பிரபல நடிகர்களில் ஒருவர் விக்ரம். இவர் அவரது மகன் துருவ் விக்ரம் அவர்களுடன் இணைந்து மகான் என்ற படத்தில் நடித்துள்ளார். இப்படத்தில் பாபி சிம்ஹா, வாணி போஜன், சிம்ரன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களாக நடித்துள்ளனர். இப்படத்தின் வெளியீட்டு தேதி கடந்த ஆண்டே அறிவிக்கப்படும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்தனர்.
இந்நிலையில் தற்போது இந்த படத்தின் வெளியீட்டு தேதியை படக்குழு அறிவித்துள்ளது. அதாவது பிப்ரவரி 10ஆம் தேதி அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் மகான் திரைப்படம் வெளியாகும் என்று அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது விக்ரம் ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை கொடுத்துள்ளது.