சன் மியூசிக்கில் விஜேவாக தனது நடிப்பை தொடங்கிய ரியோ அதன்பிறகு விஜய் டிவியில் ஒளிபரப்பான சரவணன் மீனாட்சி சீரியல் மூலம் நல்ல புகழை பெற்றார். பல நிகழ்ச்சிகளை தொகுத்து வந்த பிறகு காதல் ஒன்று கண்டேன் என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமான இவர் பிக்பாஸ் சீசன் 4ல் கலந்துகொண்டு மேலும் பிரபலமானார். இதையடுத்து தற்போது பிளான் பண்ணி பண்ணனும் என்ற படத்தில் நடித்துள்ளார்.
இந்த படத்தை பானா காத்தாடி படத்தை இயக்கிய பத்ரி வெங்கடேஷ் இயக்கியுள்ளார். இந்த படத்தில் ரியோவுக்கு ஜோடியாக ரம்யா நம்பீசன், பாலசரவணன், ரோபோ சங்கர், தங்கதுரை ஆகியோர் நடித்துள்ளனர். இந்நிலையில் இந்த படம் ஹாட்ஸ்டார் மற்றும் விஜய் டிவியில் வெளியாகும் என்று படக்குழு அறிவித்துள்ளது. கொரோன காரணமாக நீண்ட நாள் கிடப்பில் கிடந்த இந்த படம் தற்போது ஓடிடி தளத்தில் வெளியாகிறது.