நடிகை நயன்தாராவின் மூன்று படங்கள் நேரடியாக ஓடிடியில் ரிலீஸாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
கொரோனா ஊரடங்கு காரணமாக தியேட்டர்கள் மூடப்பட்டுள்ளதால் பல புதிய திரைப்படங்கள் ஓடிடியில் வெளியாகி வருகிறது. கடந்த வருடம் சூரரை போற்று, பென்குயின், பொன்மகள் வந்தாள் உள்ளிட்ட படங்கள் ஓடிடியில் ரிலீஸானது. இதை தொடர்ந்து பல திரைப்படங்கள் ஓடிடியில் ரிலீஸாகி வருகிறது. மேலும் வருகிற ஜூன் 18-ஆம் தேதி தனுஷின் ஜகமே தந்திரம் திரைப்படம் ஓடிடியில் ரிலீஸாக உள்ளது. இந்நிலையில் தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகியாக வலம் வரும் நயன்தாராவின் மூன்று திரைப்படங்கள் ஓடிடியில் ரிலீசாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
அதன்படி நெற்றிக்கண், கூலாங்கல், ராக்கி ஆகிய படங்கள் ஓடிடி ரிலீஸுக்கு தயாராகி வருவதாக கூறப்படுகிறது. இதில் நெற்றிக்கண் படத்தில் நயன்தாரா சோலோ ஹீரோயினாக நடித்துள்ளார். மேலும் நயன்தாரா, விக்னேஷ் சிவனின் ரவுடி பிக்சர்ஸ் நிறுவனம் கூலாங்கல் படத்தை தயாரித்துள்ளது. அதேபோல் ரவுடி பிக்சர்ஸ் நிறுவனம் ராக்கி படத்தின் வெளியீட்டு உரிமையை கைப்பற்றியுள்ளது. விரைவில் இந்த படங்களின் ஓடிடி ரிலீஸ் குறித்த அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.