மனைவி ஒருவர் தன் கணவரிடம் கள்ளத்தொடர்பு வைத்திருப்பதாக அவமானப்படுத்திய பெண் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார்.
கர்நாடக மாநிலம் பாகல்கோட்டையில் உள்ள கிராமத்தில் வசிபவர் யரண்ணா. இவர் அந்த பகுதியில் தையல் கடை ஒன்றை நடத்தி வருகிறார். இவருடைய மனைவி லதா ஆவார். இந்நிலையில் தையல் கடைக்கு வரும் பெண்களுடன் தொடர்பு வைத்திருப்பதாக கூறி தனது கணவரிடம் லதா சண்டையில் ஈடுபட்டு வந்துள்ளார். கடந்த 3 மாதங்களுக்கு முன்பு கோவள்ளி கிராமத்தை சேர்ந்த சங்கீதா(23) என்பவர் தையல் கடையில் வேலைக்கு சேர்ந்துள்ளார். சங்கீதா ஏற்கனவே திருமணமாகி கணவரை பிரிந்த நிலையில், யரண்ணாவுக்கும், சங்கீதாவுக்கும் இடையே தொடர்பு இருப்பதாக லதாவுக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது.
இதனால் சங்கீதாவை லதா அடித்து உதைத்து உள்ளார். இதையடுத்து சம்பவத்தன்று சங்கீதா கடையிலிருந்துள்ளார். அப்போது அங்கு வந்த லதா கடையை இழுத்து மூடி, பக்கத்தில் உள்ளவர்களை அழைத்து எனது கணவரும், சங்கீதாவும் கடையினுள் உல்லாசமாக இருக்கிறார்கள், அவர்களை கையும் களவுமாகப் பிடிக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.
இதனால் கடையைத் திறந்து பார்த்தபோது சங்கீதா மட்டும் இருந்துள்ளார். ஆகவே பொதுமக்கள் லதாவை திட்டி விட்டு அங்கிருந்து சென்றுள்ளனர். இந்நிலையில் தன்னை அவமானப்படுத்தியதை நினைத்து மனம் உடைந்த சங்கீதா தனது வீட்டிற்கு சென்று தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதுகுறித்து அறிந்த காவல்துறை சங்கீதாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர்.
இதுகுறித்த காவல்துறை விசாரணையில் சங்கீத தற்கொலை செய்யவில்லை, லதா தான் சங்கீதாவை கொலை செய்து உடலை தூக்கில் தொங்கவிட்டு இருப்பதாக சங்கீதாவின் உறவினர்கள் கூறியுள்ளனர். அதன்பேரில் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்