பேருந்தில் மின்கம்பம் உரசி தீப்பிடித்ததால் 3 பயணிகள் உடல் கருகி பலியாகியுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள டெல்லி ஜெய்ப்பூர் தேசிய நெடுஞ்சாலையில், பேருந்து ஒன்று பயணிகளுடன் சென்று கொண்டிருந்தபோது தாழ்வாக இருந்த மின் கம்பி மீது உரசியுள்ளது. இதனால் பேருந்தின் மேற்பரப்பில் திடீரென தீப்பற்றி எரிந்துள்ளது. இதனால் பேருந்தின் மேற்பரப்பில் தீப்பற்றி எரிந்ததை கவனிக்காத பேருந்து ஓட்டுனர் தொடர்ந்து பேருந்தை ஓட்டியுள்ளார். இதையடுத்து தீ மளமளவென்று பேருந்து முழுவதுமாகப் பரவி உள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்த பேருந்து ஓட்டுனர் பேருந்தை உடனடியாக நிறுத்தியுள்ளார்.
இதை கவனித்த பேருந்தில் இருந்த பயணிகள் தீப்பிடித்ததை பார்த்து அலறியடித்து பேருந்திலிருந்து இறங்கியுள்ளனர். இருப்பினும் இந்த தீ விபத்தில் சிக்கி 3 பேர் உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். மேலும் பலர் படுகாயமடைந்துள்ளதால் அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். இது குறித்து தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீயணைப்பு வீரர்கள் உதவியுடன் தீயை அணைக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். மேலும் இந்த விபத்து தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்த உள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.