திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே குடியிருப்பு பகுதிக்குள் காட்டு யானைகள் புகுந்ததால் பொதுமக்கள் அலறி அடித்து ஓட்டம் பிடித்தனர்.
உடுமலை அருகே உள்ள தமிழக கேரள எல்லைப் பகுதியான மறையூரில் ஏராளமானோர் வசித்து வருகின்றனர். வனப்பகுதியில் இருந்து வெளியேறிய காட்டு யானை கூட்டம் அங்கு திடீரென புகுந்ததால் குடியிருப்புவாசிகள் அச்சமடைந்து வீதியில் ஓட்டம் பிடித்தனர். இதுகுறித்து தகவலறிந்த வனத்துறையினர் நேரில் சென்று யானைகளை விரட்டும் பணியில் ஈடுபட்டனர்.
இதேபோல தென்காசி மாவட்டம் கடையம் அருகே விளைநிலத்தில் புகுந்த காட்டு யானைகள் பயிர்களை சேதப்படுத்தின. தோரண மலை அடிவாரத்தில் பயிரிடப்பட்டிருந்த நெல், வாழை மற்றும் தினை பயிர்கள் நன்கு வளர்ந்து அறுவடைக்கு தயாரான நிலையில் விளைநிலங்களுக்குள் இரவு நேரத்தில் காட்டு யானைகள் புகுந்து பயிர்களை சேதப்படுத்தி வருகின்றது. எனவே மலையடிவாரத்தில் கம்பி வேலி அமைக்கும் பணியை முழுமையாக நிறைவேற்ற வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.