Categories
உலக செய்திகள்

ஓடும் ஆம்புலன்சில் ஏறிய பெண்… மருத்துவரிடம் சில்மிஷம்…. லண்டனில் அதிர்ச்சி சம்பவம்…!!

லண்டனில் சிகிச்சைக்காக ஆம்புலன்ஸில் சென்ற பெண் அதிலிருந்த ஆண் மருத்துவரிடம் தவறான முறையில் நடந்ததால் காவல்துறையினர் அவரை கைது செய்துள்ளனர்.

லண்டனில் தீபா மேகனி என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் இவருக்கு கடந்தாண்டு ஜூலை மாதத்தில் உடல்நல குறைவு ஏற்பட்டது. இதனால் அவர் சிகிச்சை பெற மருத்துவமனைக்கு செல்வதற்காக ஆம்புலன்ஸிற்கு தொடர்பு கொண்டுள்ளார். அதன்படி தீபாவை ஏற்றிச்செல்ல 2 துணை ஆண் மருத்துவர்களுடன் ஆம்புலன்ஸ் வந்தது.

அதில் ஏறி மருத்துவமனைக்கு சென்ற தீபா அதிலிருந்த மருத்துவர் ஒருவரிடம் பாலியல் ரீதியாக தவறான முறையில் நடந்துள்ளார். இச்சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் தீபாவை கைது செய்தனர். இதற்கிடையே அவரை காவல்துறையினர் வில்லிஸ்டன் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியுள்ளனர். அப்போது அவர் நீதிபதியிடம் தான் அந்த குற்றத்தை செய்யவில்லை என்று மறுத்ததால் தீபாவிற்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார்.

Categories

Tech |