Categories
உலக செய்திகள்

ஓடும் காரில் இருந்து விழுந்த குழந்தை… சாலையில் நடந்த ஆச்சரியம்… வைரலாகும் வீடியோ காட்சி…!!

பரபரப்பான சாலையில் ஓடும் காரில் இருந்து குழந்தை கீழே விழுந்த வீடியோ காட்சி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

ஷிரின்கான் என்ற ட்விட்டர் பயனர் ஒருவர் வீடியோ காட்சி ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ காட்சியானது சமூக வலைதளங்களில் மிகவும் வைரலாகி வருகிறது. அந்த வீடியோ காட்சியில் நான்கு வழி சாலையில் ஒரு வயது இருக்கும் குழந்தை சென்றுகொண்டிருக்கும் SUV காரிலிருந்து கீழே விழுந்துள்ளது. காரிலிருந்து விழுந்த குழந்தை  அம்மா… அம்மா… என்று கூறிக்கொண்டே காரின் பின்னால் ஓடிக்கொண்டு செல்கிறது. அப்போது அங்கே இருசக்கர வாகனத்தில் வந்த பெண் ஒருவர் ஓடும் குழந்தையின் கையை பிடித்து தடுத்து நிறுத்தியுள்ளார்.

சிறிது தூரம் சென்று நின்ற காரிலிருந்து குழந்தையின் அம்மா கதறிக்கொண்டு ஓடி வருகிறார். பின் அந்தப் பெண்ணுக்கு நன்றி தெரிவித்து விட்டு குழந்தையை தூக்கி செல்கிறார். குழந்தை விழுந்த நிலையில் பின்னால் வந்த வாகனங்கள் நின்றுவிட்டதால் குழந்தையின் உயிருக்கு எந்த ஆபத்தும் நிகழவில்லை. வேகமாக சென்ற காரிலிருந்து விழுந்த நிலையிலும் குழந்தைக்கு அடியும் இல்லாததால் பார்ப்போரை அதிர்ச்சியிலும், நெகிழ்ச்சிழ்ச்சியிலும் ஆழ்த்தியது. மேலும் குழந்தை மிகவும் அதிர்ஷ்டமான குழந்தை என வீடியோவை பார்ப்பவர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

https://twitter.com/i/status/1371705074611859456

Categories

Tech |