உத்தரகாண்ட் மாநிலத்தில் பிரையன் கலியர் என்ற பகுதியை சேர்ந்த பெண் ஒருவர் நேற்று இரவு தனது 6 வயது மகளை அழைத்துக் கொண்டு வீட்டிற்கு நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது சோனி என்ற நபர் தனது காரில் லிப்ட் கொடுப்பதாக அந்தப் பெண்ணிடம் கூறியுள்ளார். அதனை நம்பி அந்தப் பெண்ணும் தனது மகளுடன் காரில் ஏறியுள்ளார். அந்த காரில் ஏற்கனவே சோனாவின் நண்பர்கள் இருந்துள்ளனர்.
இதையடுத்து ஓடும் காரில் அந்தப் பெண்ணையும் அவரின் ஆறு வயது மகளையும் காரில் இருந்தவர்கள் அனைவரும் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். அதன்பிறகு ஓடும் காரிலிருந்து இருவரையும் ஆற்றங்கரை அருகே தள்ளிவிட்டனர். இதையடுத்து பாதிக்கப்பட்ட அந்த பெண் நடந்த சம்பவம் பற்றி போலீசில் புகார் அளித்தார். ‘
அந்தப் புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து தப்பியோடிய கும்பலை தீவிரமாக தேடி வருகின்றனர். தற்போது பாதிக்கப்பட்ட அந்தப் பெண்ணும் அவரின் மகளும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள். ஓடும் காரில் தாயும் மகளும் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.