Categories
மதுரை மாவட்ட செய்திகள்

ஓடும் பஸ்சில்… “20 பவுன் நகையை திருடிய 3 பெண்கள்”…. போலீசார் வலைவீச்சு…!!

மதுரையில் ஓடும்  பஸ்ஸில் பயணித்த  பெண்ணிடம் 20 பவுன் நகையை திருடிச் சென்ற மூன்று பெண்களை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர்.

தஞ்சாவூர் சுப்பிரமணியன்  கோயில் தெருவில் வசித்து வரும் அழகர்சாமி என்பவருடைய மனைவி ருக்குமணி(36)  அருப்புக்கோட்டையில் உள்ள சொந்தக்காரர்கள் வீட்டு நிகழ்ச்சிக்கு சென்று விட்டு ஊருக்கு திரும்பினார். அப்போது வரும் வழியில் மதுரையில் உள்ள உறவினர் வீட்டிற்கு செல்வதற்காக ரிங்ரோடு மண்டேலா  நகரில்  இறங்கியுள்ளார்.

பின் அங்கிருந்து அவர் மதுரை பெரியார் பேருந்து நிலையம் செல்லும் பஸ்சில் சென்று  கொண்டிருந்தபோது பக்கத்தில் மூன்று பெண்கள் கையில் குழந்தையை வைத்துக்கொண்டு இருந்தார்கள். அவர்கள் சமயம் பார்த்து  ருக்குமணி பையில் இருந்த 20 பவுன் நகையை திருடிவிட்டு தப்பித்து சென்றுவிட்டனர். இதுகுறித்து அவனியாபுரம் காவல் நிலையத்தில் ருக்குமணி புகார் அளித்துள்ளார். இதுதொடர்பாக அந்த மூன்று பெண்களையும் காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர்.

Categories

Tech |