Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

ஓடும் பஸ்ஸில் சில்மிஷம்!…. மாணவிகள் பகீர் குற்றசாட்டு…. டிரைவர் மீது பாய்ந்த போக்சோ சட்டம்…. பரபரப்பு….!!!!

தற்போது பெண்கள் பல துறைகளில் பணிபுரிந்து சமூகத்தில் முன்னேற்றமடைந்து வருகின்றனர். இதற்கிடையில் ஒரு சில காமக் கொடூரர்களால் பெண்களின் வாழ்க்கை சீரழியும் நிலை ஏற்படுகிறது. கடந்த சில நாட்களாகவே ஒரு சில பள்ளிகளில் பாலியல் குற்றச்சாட்டு ஏற்படும் அவலநிலை தொடர்கிறது. இதனால் தமிழகத்தில் பெண் குழந்தைகளின் பாதுகாப்பு கேள்விக்குறியாகி வருவதாக அச்சம் நிலவுகிறது. அந்த வகையில் தற்போது பேருந்து ஓட்டுநரும் பள்ளி மாணவர்களிடம் சில்மிஷத்தில் ஈடுபட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஈரோடு மாவட்டம் கோபி அருகேயுள்ள புதுக்காடு பகுதியில் வசித்து வருபவர் சரவணன் (48). இவர் கோபியிலிருந்து நம்பியூர் போகும் 2ஆம் எண் அரசு பேருந்தில் கண்டக்டராக பணிபுரிந்து வருகிறார். இந்த பேருந்தில் தினசரி குருமந்தூர் அரசு மேல்நிலை பள்ளிக்கு பெரும்பாலான மாணவ- மாணவிகள் சென்று வருகின்றனர். இதற்கிடையில் பயணம் மேற்கொள்ளும் மாணவிகளிடம் சரவணன் சில்மிஷத்தில் ஈடுபட்டு வந்ததாக மாணவிகள் ஏற்கனவே தங்களது பெற்றோர்களிடம் கூறி வந்தார்கள். இதனையடுத்து பெற்றோர்கள் பள்ளியின் தலைமை ஆசிரியரிடம் இது தொடர்பாக தெரிவித்தார்கள்.

இதனால் தலைமை ஆசிரியர் கண்டக்டர் சரவணனை கண்டித்ததாக தெரிகிறது. எனினும் கண்டக்டர் சரவணன் தொடர்ந்து மாணவிகளிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டு வந்ததாக கூறப்படுகிறது. ஒருக்கட்டத்தில் மாணவிகளின் பெற்றோரும் கண்டக்டர் சரவணனை எச்சரித்து இருக்கின்றனர். இந்நிலையில் நேற்று முன்தினம் மாலை கோபியிலிருந்து நம்பியூரை நோக்கி 2ம் எண் அரசு டவுன் பேருந்து புறப்பட்டது. வழக்கம்போல குருமந்தூர் அரசு மேல்நிலைப் பள்ளி மாணவ-மாணவிகள் அந்த பேருந்தில் ஏறி பயணம் மேற்கொண்டனர். இந்நிலையிலும் பணியிலிருந்த கண்டக்டர் சரவணன் மாணவிகளிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டதாக தெரிகிறது.

இது  பற்றி மாணவிகள் தங்களது பெற்றோர்களுக்கு தகவல் தெரிவித்தனர். அதனை தொடர்ந்து புது சூரிபாளையம் எனும் இடத்தில் 50க்கும் மேற்பட்ட பெற்றோர்கள் மற்றும் பொதுமக்கள் அந்த பேருந்தை சிறைபிடித்து சரவணனை சுற்றி வளைத்தார்கள். இதுகுறித்து தகவல் கிடைத்ததும் நம்பியூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் நிர்மலா காவல்துறையினருடன் சம்பவ இடத்துக்கு சென்று கண்டக்டர் சரவணனை போலீஸ் நிலையத்துக்கு அழைத்து வந்தார்.

அதன்பின் மாணவிகளின் பெற்றோர்கள் கொடுத்த புகாரின்படி  காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு கண்டக்டர் சரவணனை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தார்கள். பின் சரவணன் கோபி 2வது மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டார். இவ்வாறு சரவணன் போக்சோ சட்டத்தில் கைதுசெய்யப்பட்ட தகவல் அரசு போக்குவரத்து கழக அதிகாரிகளுக்கும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் அவர் மீது துறைரீதியான நடவடிக்கை பாயும் என கூறப்படுகிறது.

Categories

Tech |