பேருந்து மீது பேனர் விழுந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள பற்றிச்சன்விளை சாலையில் மார்த்தாண்டத்தில் இருந்து பயணிகளை ஏற்றி கொண்டு அரசு பேருந்து ஒன்று வந்து கொண்டிருந்தது. அப்போது திடீரென சாலை ஓரத்தில் அஜித் என்பவர் கடையின் முன்பு வைக்கப்பட்டிருந்த டிஜிட்டல் பேனர் காற்றில் பறந்து அரசு பேருந்து விழுந்துள்ளது. இதில் பேருந்தின் முன்பக்க கண்ணாடி முழுவதுமாக உடைந்து விட்டது. ஆனால் பயணிகள் அதிஷ்டசமாக உயிர் தப்பினர்.
இதுகுறித்து பேருந்து ஓட்டுநர் பரமேஸ்வரன் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்கப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.