பேருந்தை நிறுத்தாததால் ஓடும் பேருந்தில் இருந்து மாணவி குதித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன. நாமக்கல் அருகே உள்ள ஈஸ்வரமூர்த்தி பாளையம் மேல்நிலைப் பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படிக்கும் மாணவி பேருந்து நிறுத்தம் வரும் பொழுது நடத்துனரிடம் பேருந்தை நிறுத்துமாறு கூறியுள்ளார். அதற்கு அவர் பேருந்தை நிறுத்த முடியாது வேண்டும் என்றும், வேண்டுமெனில் ஓடும் பேருந்தில் இருந்து இறங்குமாறு கூறியுள்ளார்.
இதை கேட்டு கோபம் அடைந்த மாணவி ஓடும் பேருந்தில் இருந்து குதித்துள்ளார். இதனால் அவர் நிலை தடுமாறி சாலையில் விழுந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பேருந்தை நிறுத்தாததது நடத்துனர் தவறா? நிறுத்தவில்லை என்று கோபமடைந்து ஓடும் பேருந்தில் குதித்தது மாணவி தவறா?