Categories
சென்னை மாவட்ட செய்திகள்

ஓடும் பேருந்தில் சிறுமியிடம் அத்துமீறிய போலீஸ்காரர்…. பின் நடந்த அதிரடி சம்பவம்….!!!!

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகேயுள்ள ஒரு கிராமத்தில் 14 வயது சிறுமி வசித்து வருகிறார். இவர் தனது தாயுடன் தாம்பரத்திலிருந்து அரசுபேருந்தில் மதுராந்தகம் நோக்கி சென்று கொண்டிருந்தார். அப்போது 3 பேர் அமரும் இருக்கையில் தாய், மகள் இருவரும் அமர்ந்திருந்தனர். இதையடுத்து சிறுமிக்கு அருகில் முதுகரை கிராமத்தை சேர்ந்த சதீஷ் (35) என்பவர் அமர்ந்திருந்தார். அதன்பின் பேருந்தில் சதீஷ், அச்சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக தெரிகிறது. இதனை பேருந்தில் நின்று கொண்டிருந்த பயணி ஒருவர் கவனித்து சிறுமியின் தாயிடம் தெரிவித்து இருக்கிறார்.

இதன் காரணமாக ஆத்திரமடைந்த சிறுமியின் தாயார் மற்றும் பேருந்தில் இருந்தவர்கள் அவரை தாக்கியுள்ளனர். அதனை தொடர்ந்து பேருந்து மதுராந்தகத்தை அடையும்போது அவரை பிடித்து காவல்துறையினரிடம் ஒப்படைத்துள்ளனர். அதன்பின்  காவல்துறையினர் நடத்திய விசாரணையில் சிறுமியிடம் அத்துமீறிய சதீஷ் மதுராந்தகத்தை அடுத்த முதுகரை கிராமத்தில் வசித்து வருபவர் என்பதும், இவர் சென்னை பரங்கி மலை காவல் நிலையத்தில் போலீஸ்காரராக பணிபுரிந்து வருகிறார் என்பதும் தெரியவந்தது. இதற்கிடையில் மேல்மருவத்தூர் மகளிர் போலீஸ் நிலையத்தில் சிறுமியின் தாய் கொடுத்த புகாரின்படி காவல்துறையினர் சதீஷை போக்சோ சட்டத்தில் கைதுசெய்து சிறையில் அடைத்தனர்.

Categories

Tech |