Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

ஓடும் பேருந்தில் ஜன்னல் வழியாக கீழே விழுந்த குழந்தை…. பதறிய பயணிகள்…. பரபரப்பு சம்பவம்…!!!

ஓடும் பேருந்தில் இருந்து 4 வயது குழந்தை ஜன்னல் வழியாக கீழே விழுந்து படுகாயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள நாகர்கோவில் அண்ணா பேருந்து நிலையத்திலிருந்து அரசு பேருந்து கன்னியாகுமரி நோக்கி சென்று கொண்டிருந்தது. இந்நிலையில் கோட்டார் அரசு ஆயுர்வேத மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முன்பு சென்று கொண்டிருந்த போது ஜன்னல் வழியாக ஒரு குழந்தை சாலையில் விழுந்தது. அப்போது குழந்தையின் சத்தம் கேட்ட ஓட்டுநர் உடனடியாக பேருந்து நிறுத்தினார்.

இதனையடுத்து பேருந்தில் இருந்த குழந்தையின் தாயார் ஓடி வந்து தூக்கிய போது தலையில் படுகாயம் ஏற்பட்டு ரத்தம் வடிந்தது. பின்னர் ரத்தம் சொட்ட சொட்ட குழந்தையை தாயார் தூக்கிக் கொண்டு மருத்துவமனைக்கு விரைந்து ஓடினார். ஜன்னல் ஓரத்தில் இருந்தபடி விளையாடி கொண்டிருந்ததால் 4 வயது குழந்தை கீழே விழுந்துருக்கலாம் என கூறப்படுகிறது. இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |