கள்ளக்குறிச்சியில் இருந்து அரசு பேருந்து கீழ்பாடி வழியாக லாலாபேட்டை நோக்கி சென்று கொண்டிருந்தது. இந்த பேருந்தில் 30-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பயணம் செய்துள்ளனர். இந்நிலையில் மேல தேவனூர் பேருந்து நிறுத்தம் அருகே சென்று கொண்டிருந்த போது சேர்ந்தாங்கல் மற்றும் கோமாளூர் கிராமங்களை சேர்ந்த மாணவர்களுக்கிடையே திடீரென தகராறு ஏற்பட்டுள்ளது.
இதில் கோபமடைந்த மாணவர்கள் ஒருவரை ஒருவர் தகாத வார்த்தைகளால் திட்டி தாக்கி கொண்டனர். ஓடும் பேருந்தில் மாணவர்கள் தகராறு செய்ததால் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. அந்த புகாரின் பேரில் இரு கிராமங்களை சேர்ந்த 13 மாணவர்கள் மீது போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.