ஆந்திராவில் உள்ள பிரகாசம் மாவட்டத்தில் பயணிகளுடன் சென்ற தனியார் சொகுசு பேருந்து திடீரென தீப்பிடித்து எரிந்ததால், பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
ஹைதராபாத்தில் இருந்து சீராலாவுக்கு சென்ற தனியார் சொகுசு பேருந்து இராஜபாளையம் அருகே சென்றபோது, என்ஜின் பகுதியில் தீ பற்றி எரிய ஆரம்பித்தது. தீப்பற்றியதை உடனடியாக கவனித்த ஓட்டுநர், பேருந்தை நிறுத்திவிட்டு கீழே இறங்கி பயணிகளையும் கீழே இறங்குமாறு கூறியுள்ளார்.
இதை எடுத்து பயணிகள் அனைவரும் உடனடியாக ஜன்னல் வழியாகவும், கதவு வழியாக வெளியேறியுள்ளனர். சம்பவம் அறிந்த தீயணைப்பு துறையினர் வருவதற்கு முன்பே பேருந்து முழுவதும் எரிந்து விட்டது. இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் ஓட்டுனர் எச்சரித்ததால், அதிர்ஷ்டவசமாக பயணிகள் உயிர் தப்பியுள்ளனர்.