கர்நாடக மாநிலம் பெங்களூருவில் இன்று சென்று கொண்டிருந்த பேருந்து ஒன்றில் திடீரென்று தீப்பிடித்து பேருந்து முழுவதும் எரிந்து சாம்பலான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பெங்களூருவில் உள்ள சாமராஜ பேட்டை பகுதியில் 40-க்கும் அதிகமான பயணிகளோடு சென்று கொண்டிருந்த பேருந்து முன்பக்க இன்ஜினில் திடீரென்று தீப்பிடித்து எரிந்தது. இதை பார்த்த ஓட்டுநர் பேருந்தை உடனே நிறுத்தியதோடு மட்டுமல்லாமல், உடனடியாக பேருந்தில் பயணித்த பயணிகளை கீழே இறக்கியுள்ளார். ஓட்டுநரின் சாமர்த்தியத்தால் அதிர்ஷ்டவசமாக 40-க்கும் அதிகமான பயணிகள் உயிர் தப்பியுள்ளனர்.
இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து ஓடும் பேருந்தில் இன்ஜினில் திடீரென பற்றிய தீயால் பேருந்து முழுவதும் எரிந்து சாம்பலானது. இதைப் பார்த்த பொதுமக்கள் தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு துறையினர் தீயை அணைத்தனர். இதையடுத்து இந்த சம்பவம் குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.