ஓடும் பேருந்தில் திருடிய குற்றத்திற்காக பெண்ணை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
சிவகங்கை மாவட்டத்தில் உள்ள திருப்பத்தூர் பேருந்து நிலையத்திற்கு புதுக்கோட்டையை சேர்ந்த மீனா என்பவர் அரசு பேருந்தில் வந்துள்ளார். இந்நிலையில் மீனா தன் பையில் வைத்திருந்த பர்ஸ் காணாமல் போனதை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார். இதுகுறித்து மீனா காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
அந்தப் புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் நடத்திய விசாரணையில் சமயபுரம் பகுதியை சேர்ந்த கவிதா என்பவர் பர்ஸை திருடியது தெரியவந்துள்ளது. இதனையடுத்து கவிதாவை கைது செய்த காவல்துறையினர் அவரிடமிருந்த 2000 ரூபாயை பறிமுதல் செய்துள்ளனர்.