பேருந்தில் பெண்ணிடம் நகையை திருடிச் சென்ற மர்ம நபரை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.
விருதுநகர் மாவட்டத்தில் உள்ள மகாராஜா புரத்தில் கோவிந்தம்மாள் என்பவர் வசித்து வருகிறார். இவர் ராஜபாளையத்தில் உள்ள தனது உறவினர் வீட்டிற்கு பேருந்தில் சென்றுள்ளார். இந்நிலையில் தனது உறவினர் வீட்டில் வைத்து பர்ஸை பார்த்த போது அதில் இருந்த 20 பவுன் தங்க நகை காணாமல் போனதால் கோவிந்தம்மாள் அதிர்ச்சியடைந்துள்ளார்.
இதுக்குறித்து கோவிந்தம்மாள் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் நகையை திருடிச் சென்ற மர்ம நபர்கள் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.