Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

ஓடும் பேருந்தில் நடந்த சம்பவம்…. வசமாக சிக்கிய 2 பேர்…. போலீஸ் நடவடிக்கை…!!

பேருந்தில் வைத்து பயணியிடமிருந்து பணத்தை திருடிய 2 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

திருச்சி மாவட்டத்திலுள்ள தாரநல்லூர் பகுதியில் சிவசங்கரன் என்பவர் வசித்து வருகிறார். இவர் தெப்பக்குளம் பேருந்து நிலையத்தில் இருந்து புறப்பட்ட பேருந்தில் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். அப்போது பேருந்தில் பயணம் செய்த 2 பேர் சிவசந்திரன் வைத்திருந்த பணப்பையை திருடி சென்றுள்ளனர். இதுகுறித்து சிவசந்திரன் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் நடத்திய விசாரணையில் எடமலைபட்டிபுதூர் பகுதியை சேர்ந்த மகேந்திரன் மற்றும் குமார் ஆகிய இருவரும் இணைந்து சிவசந்திரனின் பணத்தை திருடியது தெரியவந்துள்ளது. இதனை அடுத்து இரண்டு பேரையும் காவல்துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |