Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

“ஓடும் பேருந்தில்” 12 பவுன் தங்க நகை அபேஸ்…. அதிர்ச்சியில் பயணிகள்…. போலீஸ் விசாரணை…!!

ஓடும் பேருந்தில் நகை பறிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள மார்த்தாண்டம் அருகே வெட்டுமணி பகுதியில் புதிய அந்தோணியார் திருத்தலம் அமைந்துள்ளது. இந்த திருத்தலத்தில் வழிபாடு முடிந்ததும், ஏராளமானோர் வீட்டிற்கு செல்வதற்காக பேருந்தில் கூட்டமாக ஏறியுள்ளனர். இதனால் பேருந்தில் கூட்ட நெரிசல் அதிகமாக இருந்தது. இதை பயன்படுத்திக் கொண்டு மர்மநபர்கள் பேருந்தில் பயணம் செய்த 2 பெண்கள் மற்றும் 1 குழந்தையின் கழுத்தில் இருந்த தங்கச் சங்கிலிகளை பறித்துள்ளனர். மொத்தம் 12 பவுன் தங்க நகைகள் பறிக்கப்பட்டுள்ளது.

இதனால் அதிர்ச்சியடைந்த பெண்கள் திருடன் என்று கூச்சலிட்டனர். இதனையடுத்து ஓட்டுநர் காவல்நிலையத்திற்கு பேருந்தை ஓட்டிச் சென்றுள்ளார். அங்கு காவல்துறையினர் பயணிகளை  சோதனை செய்தனர். இருப்பினும் நகைகள் கிடைக்கவில்லை. எனவே பாதிக்கப்பட்டவர்களிடம் காவல்துறையினர் புகார் எழுதி வாங்கியுள்ளனர். மேலும் இதுகுறித்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

Categories

Tech |