ஓடும்போதே திடீரென கார் தீ பிடித்து எரிந்த சம்பவம் பரபரப்பை எற்படுத்தியுள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள பள்ளிக்கரணை பகுதியில் ப்ரீத்தி என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் ப்ரீத்தி தனது தோழிகள் மூன்று பேருடன் இணைந்து அவரது சொந்தக் காரில் செம்மஞ்சேரி சுனாமி குடியிருப்பு பகுதிக்கு சென்றுள்ளார். இதனை அடுத்து சாலையில் சென்று கொண்டிருக்கும் போதே திடீரென காரில் புகை வருவதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். இதனால் காரில் பயணித்தவர்கள் அச்சத்தில் உடனடியாக காரை விட்டு இறங்கிவிட்டனர்.
இந்நிலையில் காரில் பற்றிய தீயானது மளமளவென கார் முழுவதும் பரவிவிட்டது. இது குறித்து தகவல் அறிந்த தீயணைப்புத் துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று காரில் பற்றி எரிந்த தீயை அணைத்து விட்டனர். ஆனால் இந்த விபத்தில் காரானது முழுவதும் தீக்கிரையானது. இவ்வாறு காரில் இருந்து புகை வந்தவுடனே காரில் பயணித்தவர்கள் உடனடியாக இறங்கிவிட்டதால் பெரும் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டுள்ளது. மேலும் இச்சம்பவம் குறித்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.