Categories
சென்னை மாவட்ட செய்திகள்

ஓடும் மின்சார ரயிலில்… சிக்கயிருந்த பயணியை நடைமேடை பக்கமாக தள்ளி காப்பாற்றிய ரயில்வே போலீசார்…!!!

மின்சார ரயிலில் ஏற முயன்ற விபத்தில் சிக்கயிருந்த பயணியை ரயில்வே காவல்துறையினர் நடைமேடை பக்கமாக தள்ளி காப்பாற்றினார்கள்.

சென்னையை அடுத்துள்ள ஆதம்பாக்கம் இ.பி காலனி பகுதியில் வசித்து வருபவர் பாஷா(54). இவர் கடந்த 10ஆம் தேதி கூடுவாஞ்சேரி செல்வதற்கு பரங்கிமலை ரயில் நிலையத்திற்கு வந்துள்ளார். அப்போது மின்சார ரயில் கிளம்பியதால் பதற்றமடைந்த அவர், ஓடுகின்ற ரயிலில் ஏற முயன்றுள்ளார். அப்போது மீனம்பாக்கம் செல்வதற்கு பெட்டியில் பயணித்த ரயில்வே காவல்துறையினர் அனுஷா, சுமேஷ் ஆகியோர் இதைப் பார்த்து உடனே தந்திரமாக பாஷாவை நடைமேடை பக்கமாக தள்ளிவிட்டு காப்பாற்றினார்கள்.

மேலும் மின்சார ரயிலில் ஏற முயற்சித்து விபத்தில் சிக்கயிருந்த பயணியை ரயில்வே காவல்துறையினர் நடைமேடை பக்கமாக தள்ளி காப்பாற்றிய சம்பவம் அங்குள்ள சிசிடிவி கேமராவில் பதிவானது. இந்த காட்சி சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. இந்நிலையில் பயணிகளின் உயிரை காப்பாற்றிய ரயில்வே காவல்துறையினரை உயரதிகாரிகள் பாராட்டியுள்ளனர்.

Categories

Tech |