கடந்த 29ஆம் தேதி அர்ஜென்டினாவில் உள்ள Buenos Aires அருகே ரயில் நிலையத்தில் பெண் ஒருவர் பிளாட்பாரத்தில் நின்று கொண்டிருந்தார். அப்போது திடீரென மயக்கமடைந்த அந்த பெண் தடுமாறி ஓடும் ரயிலில் விழுந்துள்ளார். நல்ல வேளையாக அவர் ரயில் பெட்டிக்கும், பிளாட்பாரத்திற்கும் நடுவே விழுந்ததால் சிறு காயங்களுடன் உயிர் தப்பியுள்ளார்.
https://www.instagram.com/tv/CcgY0oFFeCM/?igshid=YmMyMTA2M2Y=
இதையடுத்து அருகில் இருந்த சிலர் அந்த பெண்ணை மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து சென்றுள்ளனர். இந்த சம்பவம் தொடர்பிலான வீடியோ வெளியாகி பதைபதைப்பை ஏற்படுத்தியுள்ளது.