Categories
சென்னை மாவட்ட செய்திகள்

ஓடும் ரயிலில் ஆபாசமாக நடந்து கொண்ட வாலிபர்…. வலைத்தளத்தில் வைரலாகும் வீடியோ…. இளம்பெண்ணின் பரபரப்பு புகார்…!!

இளம்பெண்களிடம் ஆபாசமாக நடந்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்துவிட்டனர்.

சென்னை மாவட்டத்திலுள்ள நுங்கம்பாக்கத்தில் இருந்து தாம்பரம் நோக்கி சென்ற மின்சார ரயிலில் கடந்த 9-ஆம் தேதி முடிச்சூரை சேர்ந்த 27 வயது இளம்பெண் உள்பட 3 பெண்கள் மட்டும் பயணம் செய்துள்ளனர். இந்த ரயில் மீனம்பாக்கம் ரயில் நிலையத்தில் நின்ற போது பெண்கள் பெட்டியில் வாலிபர் ஒருவர் ஏறியுள்ளார். இந்நிலையில் ரயில் புறப்பட்டதும் வாலிபர் அங்கிருந்த பெண்கள் முன்பு ஆபாசமாக நடந்து கொண்டார். இதனை பார்த்ததும் இளம்பெண் அந்த வாலிபரை கண்டித்துள்ளார்.

ஆனாலும் அந்த வாலிபர் தொடர்ந்து ஆபாசமாக நடந்து கொண்டதால் இளம்பெண்ணை அதனை செல்போனில் வீடியோ எடுத்துள்ளார். இதனையடுத்து குரோம்பேட்டை ரயில் நிலையத்தில் ரயில் நின்றதும் அந்த வாலிபர் தப்பி ஓடிவிட்டார். இதுகுறித்து இளம்பெண் அளித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் மீனம்பாக்கத்தில் சேர்ந்த லட்சுமணன் என்பவரை கைது செய்து சிறையில் அடைத்துவிட்டனர்.

Categories

Tech |