சென்னை பரங்கிமலை ரயில் நிலையத்தில் பயணி ஒருவரின் உயிரை ரயில்வே போலீசார் காப்பாற்றியது தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளது. சென்னை ஆதம்பாக்கம் இபி காலனி பகுதியை சேர்ந்தவர் புரான் பாஷா (54). இவர் கடந்த 9ஆம் தேதி கூடுவாஞ்சேரி செல்வதற்காக செயின்ட் தாமஸ் மவுண்ட் ரயில் நிலையத்திற்குச் சென்றுள்ளார். அப்போது அவர் ஓடும் ரயிலில் ஏற முயற்சி செய்துள்ளார். இதனால் சமநிலை தவறி ஓடும் ரயில் மீது விழுவதை போல் சென்றுள்ளார்.
அப்போது மீனபாக்கம் செல்வதற்காக ரயிலில் ரயில்வே காவலர் அனுஷா, சுமேஷ் மற்றும் ஊழியர்கள் சென்று கொண்டிருந்தனர். அப்போது ஒருவர் ரயிலில் விழுவதைக் கண்ட அவர்கள் அவரை பாதுகாப்பாக மீட்டனர். இந்த சம்பவம் அங்கு பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. மேலும் உயிரை காப்பாற்றிய ரயில்வே ஊழியர்களுக்கு பலரும் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.