Categories
தேசிய செய்திகள்

“ஓடும் ரயிலில் இளைஞனின் சாகசம்”…. நிகழ்ந்த சோகம்…. வெளியான அதிர்ச்சி வீடியோ…!!!!!!!

திருவள்ளூர் அருகே கடந்த 2 நாட்களுக்கு முன் ரயிலில் இருந்து தவறி விழுந்து மாணவன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இரண்டு நாட்களுக்கு முன் திருவள்ளூர் மாவட்டம் திருவாலங்காடு பகுதியை அடுத்த ஒரத்தூர் என்னும் பகுதியை சேர்ந்த நீதிதேவன் என்ற மாணவர் ரயில் விபத்து ஒன்றில் உயிரிழந்து இருக்கின்றார். இவர் சென்னை மாநிலக் கல்லூரியில் பொருளியல் இரண்டாம் வருடம் படித்து வருகிறார். வேளச்சேரியில் இருந்து அரக்கோணம் செல்லும் புறநகர் ரயிலில் தொங்கியபடி சென்றபோது வேப்பம்பட்டு ரயில் நிலையத்திற்கும் செவ்வாப்பேட்டை ரயில் நிலையத்துக்கும் இடையே தவறி விழுந்து மாணவர் உயிரிழந்திருக்கிறார்.

இதில் மாணவன் முதலில் படுகாயமடைந்த நிலையில் அவரை மீட்டு பொதுமக்கள் 108 ஆம்புலன்ஸ் மூலமாக திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். இதில்  படுகாயமடைந்த மாணவர் நீதிதேவன் சிகிச்சை பலனின்றி பரிதமாக  உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் பற்றி திருவள்ளூர் ரயில்வே காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில் இறப்பதற்கு முன்பாக ரயிலில் சக நண்பர்களுடன் இணைந்து அவர் சாகசம் செய்த பழைய வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. அதில் ரயிலில் தொங்கிய படியும் மேற்கூரையில் அவர் ஏறுவது போன்றும் சாகசங்கள் செய்து வருவது தெரிந்தது.

Categories

Tech |