பீகார் மாநிலம் சாஹர்சா மாவட்டத்தில் அப்பாஸ் நாராயண் கான் என்பவர் வசித்துவருகிறார். இவர் கதிஹர் மாவட்டத்தில் சல்மாரி ரயில் நிலையத்தில் அதிகாரியாக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் அப்பாஸ் நாராயண் கான் நேற்று அதிகாலை கதிஹர் ரயில் நிலையத்திலிருந்து புறப்பட்ட எக்ஸ்பிரஸ் ரயிலில் ஏற முயற்சி செய்தார்.
அப்போது எதிர்பாராதவிதமாக ரயில் நிலைய நடைமேடைக்கும் ரயில் பெட்டியில் ஏறுவதற்கும் இடையே அவரது கால் சிக்கிக்கொண்டது. இதனால் அவர் நிலைதடுமாறி ரயில் தண்டவாளத்தில் விழுந்தார். இதில் வேகமாக சென்ற எக்ஸ்பிரஸ் அவரை சிறிது தூரம் இழுத்துச் செல்லப்பட்டு அப்பாஸ் உடல் நசுங்கி பரிதாபமாக உயிர் இழந்தார். இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து ரயில்வே போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.