சிறுமியிடம் தவறாக நடந்த சென்னையை சேர்ந்த நபருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து சேலம் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.
சென்னை மாவட்டம், மயிலாப்பூர் சேர்ந்தவர் நரேந்திரன். 41 வயதுடைய இவர் 09.8.2016-ம் அன்று சென்னையில் இருந்து பழனிக்கு புறப்பட்ட விரைவு ரயிலில் முன்பதிவு பயணம் செய்தார். அப்போது அதே ரயிலில் பயணம் செய்த 15 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இச் சம்பவம் சேலம் அருகே ரயில் வந்துகொண்டிருந்தபோது நடத்து உள்ளது.
உடனே சிறுமியின் பெற்றோர் சேலம் ரயில்வே போலீசாரிடம் புகார் அளித்தனர். புகாரின் பேரில் காவல் துறையினர் விசாரணை செய்து போஸ்கோ சட்டத்தில் வழக்குப்பதிந்து நரேந்திரனை கைதுசெய்தனர். மேலும் இந்த வழக்கு விசாரணை சேலம் போக்சோ நீதிமன்றத்தில் நடந்தது கொண்டிருந்த நிலையில், வழக்கின் விசாரணை முற்றிலும் முடிந்து நேற்று தீர்ப்பு வழங்கப்பட்டது.
நீதிபதி முருகானந்தம் வழங்கிய தீர்ப்பில், சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த குற்றத்திற்க்கு நரேந்திரனுக்கு முன்று ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ .10 ஆயிரம் அபராதமும் விதித்து அதிரடி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.