கடந்த சில நாட்களாக ரயில்வே பாதுகாப்பு படையினர் அனைத்து ரயில்களிலும் தொடர் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். அதன்படி ஒடிசா மாநிலத்தில் கட்டாக் அருகில் ரயில் சென்று கொண்டிருந்தபோது பயணிகளிடம் ரயில்வே பாதுகாப்பு படை போலீசார் சோதனை நடத்தினர்.
அப்போது ஒரு பயணியிடம் நான்கு பைகளில் ரூ.10 மற்றும் ரூ.20 நோட்டுகளாக ரூ.24,50,000 கண்டுபிடிக்கப்பட்டது. இதுகுறித்து அந்த பயணியிடம் கேட்டதற்கு அவர் சரியான பதில் அளிக்கவில்லை. இதனால் அந்த பணத்தை பறிமுதல் செய்து ரயில்வே பாதுகாப்பு படை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.