தமிழகத்தின் ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள அரக்கோணம் ரயில் நிலையத்தில் 29 வயது பெண் ஒருவர் காவல்துறையினரின் உதவியுடன் குழந்தை பிரசவித்துள்ள சம்பவம் தற்போது வைரலாகி வருகிறது. மங்களூர் எக்ஸ்பிரஸ் ரயிலில் நேற்று பெண் ஒருவருக்கு திடீரென பிரசவ வலி ஏற்பட்டது.திருப்பத்தூரில் ஏரிய அவர் பிரசவத்திற்காக அரக்கோணம் ரயில் நிலையத்தில் இறக்கப்பட்டார்.
காத்திருப்பு அறையில் அவருக்கு பிரசவம் பார்க்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு மருத்துவர்களை அழைக்கப்பட்டனர். ஆனால் மருத்துவர்கள் வருவதற்கு முன்பே பெண் காவலரின் கண்காணிப்பில் குழந்தை பிறந்தது. தாயும் சேயும் தற்போது நலமாக உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.