கேரள மாநிலத்தில் உள்ள கொல்லம் கடக்கல் பகுதியில் பல் டாக்டரான தீபக் என்பவர் வசித்து வருகிறார். சம்பவம் நடைபெற்ற அன்று தீபக் கொச்சு வேலி-மைசூர் செல்லும் மைசூர் எக்ஸ்பிரஸ் ரயிலில் முன்பதிவு பெட்டியில் பயணம் செய்துள்ளார். அதே ரயில் பெட்டியில் 3 வாலிபர்கள் 3 இளம்பெண்களிடம் பேசிக் கொண்டிருந்தனர்.
இந்நிலையில் ஈரோடு கடந்து ரயில் சென்று கொண்டிருந்தபோது பல் டாக்டர் தீபகுக்கும், 3 வாலிபர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது வாலிபர்கள் தீபக்கை சரமாரியாக தாக்கியுள்ளனர். இதுகுறித்து தீபக் பெங்களூர் ரயில்வே காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகார் ஈரோட்டுக்கு மாற்றப்பட்டது. இதனால் ஈரோடு ரயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.