உத்திரபிரதேசம் மாநிலத்தில் பார்தானா ரயில் நிலையத்தில் ஓடும் ரயிலுக்கு அடியில் சிக்கிய நபர் பத்திரமாக எழுந்து வந்து அதிர்ச்சி கொடுத்திருக்கிறார்.பிளாட்பாரத்தில் நின்று இருந்து அவர் எதிர்பாராமல் தவறி விழுந்த நிலையில் அதே நேரத்தில் அங்கு ரயில் வந்துள்ளது.
செய்வதறியாது திகைத்த அந்த நபர் அடியில் ஒரு ஓரத்தில் ஒதுங்கி கொண்டார். அந்த நபர் பிளாட்பாரத்திற்கும், தண்டவாளத்திற்கு இடையில் இருந்த நிலையில், இருக்கும் இடத்திலேயே இருக்குமாறும், நகர வேண்டாம் என்றும் மக்கள் சத்தமாக கூறியுள்ளனர்.அச்சத்தில் மக்கள் பிளாட்பாரத்தில் நின்றிருந்தனர்.ரயில் போனதும் பத்திரமாக அந்த நபர் எழுந்து வந்தது நிம்மதியை கொடுத்தது. அந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.
Viral Video : Train passed over a man at Bharthana railway station in Etawah as death…, watch breath-taking video pic.twitter.com/eHtn1LcN1A
— santosh singh (@SantoshGaharwar) September 6, 2022