உத்திரப்பிரதேச மாநிலத்தில் ஓம்வதி என்றபெண் ஒருவர் தண்டவாளத்தின் மீது சிவப்பு நிற புடவையை இரண்டு குட்டிகளில் கட்டி வைத்து ஓடும் ரெயிலை நிறுத்திய உள்ளார். அந்த வழியாக சென்ற அவர் தண்டவாளம் அடைந்திருப்பதை பார்த்துள்ளார். தூரத்தில் ரயில் வருவதை கண்ட அவர் என்ன செய்வது என்று தெரியாமல் திகைத்து நின்றார்.
உடைந்த தண்டவாளத்தில் ரயில் சென்றால் கவிழ்ந்துவிடும் என்பதை அறிந்து கொண்ட இவர், சிவப்பு நிற புடவையை இரண்டு குச்சிகளில் கட்டி ஓடும் ரயிலில் நிறுத்தியுள்ளார். அந்தப் பெண்ணின் புடவையை பார்த்த பின்னர் ரயில் மெதுவாக நின்றது. பின்னர் தண்டவாளத்தை ரயில்வே ஊழியர்கள் சரி செய்தனர். அந்தப் பெண்ணையும் வெகுவாக பாராட்டியுள்ளனர். தனது சிந்தனையால் ஆயிரக்கணக்கான உயிர்களை காப்பாற்றி உள்ளார். அவருக்கு பலரும் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்