Categories
தேசிய செய்திகள்

ஓடும் ரயில்களுக்கு இடையில் சிக்கிய குதிரை…. உயிர் தப்பிய திக் திக் நிமிடம்….!!!!!

இரண்டு ஓடும் ரயில்களுக்கு இடையில் சிக்கிய குதிரை அதன் நேர்கொண்ட பார்வையையும் ஓடும் வல்லமையையும் வைத்து எப்படி அங்கிருந்து தப்பித்தது என்பதற்கான சாட்சியாக இருக்கிறது ஐபிஎஸ் அதிகாரி திபான்ஷு கப்ரா பகிர்ந்த வீடியோ. எகிப்து நாட்டில் இம்மாத தொடக்கத்தில்தான் இந்த நிகழ்வு அரங்கேறியுள்ளது.

அதாவது, வீடியோவில் ஓடும் ரயிலில் சிறிதளவு கூட சிக்காமல் சீரான ஓட்டத்தை கடைப்பிடித்து ஒரு புறம் ரயில் சென்றதும் அந்த தண்டவாளத்தை கடந்து செல்கிறது ஒரு வெள்ளை குதிரை. இதனை ரயில் இருந்தவர்கள் பார்த்து பதறிப்போய் எப்படி அந்த குதிரை தப்பிக்க போகிறது என்ற ஆவலுடன் பார்த்து கொண்டிருந்தனர். அப்போது எடுக்கப்பட்ட வீடியோதான் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Categories

Tech |