தெலுங்கானா மாநிலம் வாடே பள்ளியை சேர்ந்த அக்ஷய் ராஜ்( 17 ) பிளஸ்ட் 2 பயின்று வந்தார். இவர் சமூகவலைத்தளங்களில் ஆக்டிவாக இருப்பவர். இந்நிலையில் அக்ஷய் ராஜ் ஓடும் ரெயில் அருகில் நெருங்கி ஆக்ஷன் ஹீரோவாக போஸ் கொடுத்து ரீல் வீடியோ எடுக்க முயன்றுள்ளார். அப்போது வேகமாக சென்ற ரயில் அவர் தலை மீது மோதிவிட்டது. இதனால் அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. இதற்கிடையில் ரயில்வே காவல்துறையினர் ஒருவர் தண்டவாளத்தில் அக்ஷய் இரத்தத்துடன் இருப்பதைக் கவனித்தார். உடனே ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு அகஷய் அருகிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
அதன்பின் அக்ஷய் மாவட்டத்திலுள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். தற்போது அக்ஷய் அபாய கட்டத்தை தாண்டி விட்டதாக தெரிவிக்கப்பட்ட நிலையில், அவருக்கு காலில் எலும்பு முறிவுகள் ஏற்பட்டு முகத்தில் காயங்கள் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து காசிப்பேட்டை ரயில்வே காவல்துறையினர் கூறியதாவது, அக்ஷய் தன் 2 நண்பர்களுடன் இன்ஸ்டாகிராம் வீடியோ எடுக்க பல்ஹர்ஷாவிலிருந்து வாரங்கல் போகும் ரயில் செல்லும் பாதையில் நின்றுள்ளார். அப்போது வேகமாக சென்ற ரயில் அவர் தலைமீது மோதி இருக்கிறது. இதில் அவர் பலத்த காயம் அடைந்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார் என கூறினார்கள்.
https://twitter.com/VishalDharm1/status/1566470675706945541?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1566470675706945541%7Ctwgr%5Ec17ea3e84c472c5acd5d7f65000a443fa3d03732%7Ctwcon%5Es1_c10&ref_url=https%3A%2F%2Fwww.dailythanthi.com%2FNews%2FIndia%2Fteen-wanted-to-make-instagram-reel-with-train-in-background-hit-by-it-785310