Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

“ஓடும் வேனில்”…. 264 பவுன் தங்க நகைகள் கொள்ளை…. மர்ம நபர்களுக்கு வலைவீச்சு….!!!

வேனில் வைக்கப்பட்டிருந்த தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னையில் உள்ள வில்லிவாக்கம் பகுதியில் தங்கபெருமாள் என்பவர் வசித்து வருகிறார். இவர் மளிகைக்கடை நடத்தி வருகிறார். இவர் தனது குடும்பத்துடன் தூத்துக்குடி மாவட்டத்தில் நடைபெற்ற திருவிழாவில் கலந்து கொள்வதற்காக ஒரு வேனில் சென்றுள்ளார். இந்த வேனை பாண்டி என்பவர் ஓட்டியுள்ளார். இவர்கள் தங்களது உடைமைகள் மற்றும் தங்க நகைகளை ஒரு பெட்டியில் வைத்து வேனின் மேற்கூரையில் வைத்துள்ளனர். அதில் மொத்தம் 264 பவுன் தங்க நகைகள் இருந்துள்ளது.

இந்நிலையில் உளுந்தூர்பேட்டை பகுதியில் வேனை நிறுத்தி ஒரு கடையில் டீ குடித்து உள்ளனர். அப்போது வேனில் மேற்கூரையில் இருந்த‌ தார்ப்பாய் அவிழ்க்கப்பட்ட நிலையில் கிடந்தது. இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த தங்கவேலு மற்றும் குடும்பத்தினர் நேரில் பார்த்துள்ளனர். அப்போது பெட்டியில் வைக்கப்பட்டிருந்த 264 பவுன் தங்க நகைகள் காணாமல் போயிருந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த தங்கவேலு திருநாவலூர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அந்த புகாரின்படி வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் 6 தனிப்படைகள் அமைத்து நகையை கொள்ளையடித்த மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

Categories

Tech |