Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

ஓடுற ரயிலில் இருந்து இறங்கினால் என்ன ஆகும்?…. காலை பறிகொடுத்த வாலிபர்…. தீவிர விசாரணையில் போலீஸ்….!!!!

நிலைதடுமாறி ரயிலில் விழுந்து வாலிபர் கால் துண்டான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ரயில் நிலையத்தில் புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த வினோத்குமார் என்பவர் பணிபுரிந்து வருகிறார். இவர் நேற்று இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரயிலில் திண்டுக்கல் நோக்கி  வந்து கொண்டிருந்தார். அப்போது வினோத்குமார் ரயிலில் தூங்கிவிட்டார். இதனையடுத்து ரயில் திண்டுக்கல் ரயில்வே நிலையத்தை கடந்து சென்றுள்ளது. இந்நிலையில் தூக்கத்திலிருந்து எழுந்த வினோத்குமார் ரயிலை விட்டு இறங்க முயன்றுள்ளார். அப்போது திடீரென நிலைதடுமாறி ரயிலுக்கு இடையே காலை விட்டுள்ளார்.

இந்த விபத்தில் வினோத்குமாரின் இடதுகால் சக்கரத்தில் சிக்கி துண்டாகி விட்டது. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த பயணிகள் உடனடியாக ரயில்வே காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் வினோத்குமாரை மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |