தன்னை விட்டு வேறு ஒரு நபருடன் ஓடிப்போன மனைவியை கண்டுபிடித்து கொடுப்பவர்களுக்கு ரூபாய் 5000 பரிசு வழங்கப்படும் என்று கணவர் அறிவித்துள்ளது வியப்பை ஏற்படுத்தியுள்ளது.
மேற்கு வங்க மாநிலம், பிங்லா கிராமத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவருக்கு திருமணம் நடைபெற்று மனைவி மற்றும் ஒரு குழந்தை உள்ளது. இவர் பணி நிமித்தம் ஹைதராபாத் சென்றிருந்த நிலையில் மனைவி குழந்தையுடன் தப்பி சென்றுள்ளா.ர் இதைத்தொடர்ந்து மனைவி குழந்தையை இழந்த துக்கத்தில் கணவர் பல இடங்களில் தேடி அடைந்துள்ளார். அவர்கள் கிடைக்காததால் சமூகவலைத்தளங்களில் இந்த தகவலை அவர் பகிர்ந்துள்ளார். இதில் அவர் தெரிவித்துள்ளதாவது: ‘டிசம்பர் 9ஆம் தேதி முதல் இந்தப் பெண்ணையும் குழந்தையையும் காணவில்லை, கண்டுபிடித்தவர்கள் எனக்கு தெரியப்படுத்துங்கள். அவர்களை கண்டுபிடித்து கொடுப்பவர்களுக்கு 5000 ரூபாய் பரிசு வழங்கப்படும்’ என்று கணவர் முகநூலில் புகைப்படம் ஒன்றை வெளியிட்டார்.
இந்த சம்பவம் தொடர்பாக தகவலறிந்த காவல்துறையினர் அந்த நபரிடம் விசாரணை மேற்கொண்டபோது மனைவிக்கு கைபேசி வாங்கிக் கொடுத்த நபருடன் அவர் தப்பிச் சென்றுள்ளதாக கூறினார். இரவு நேரங்களில் தன் மனைவி அவருடன் அதிக நேரம் பேசி வந்துள்ளதாகவும், டிசம்பர் 9ஆம் தேதி அப்பகுதியில் நம்பர் பிளேட் இல்லாத நேனோ கார் ஒன்று காணப்பட்டதாகவும் அதில் மனைவி ஏறி சென்றதாகவும் அக்கம்பக்கத்தில் இருப்பவர்கள் தெரிவித்ததாக கூறினார்.
மேலும் அவர் பணம், நகை, அடையாள அட்டை, ஆதார் அட்டை, குழந்தையின் பிறப்புச் சான்றிதழ் ஆகியவற்றை வீட்டிலேயே விட்டுச் சென்றுள்ளார். இவரது மனைவி இதற்கு முன்பும் ஒருமுறை தப்பி ஓடியிருக்கிறார். ஆனால் அவர் அப்படி செய்ததில் தனக்கு எந்த கோபமும் கிடையாது என்று கணவர் பெருந்தன்மையுடன் கூறியதோடு, மனைவியும் குழந்தையும் திரும்பி வருவதற்காக காத்திருப்பதாகவும் அவர்களுடன் சேர்ந்து வாழ விரும்புவதாகவும் கணவர் கூறியுள்ளார்.