புதுக்கோட்டை மாவட்டத்தில் சாலையில் சென்று கொண்டிருந்த ஆட்டோ திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து ஓட்டலுக்குள் புகுந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள பொன்னமராவதி பகுதியில் சீனி என்பவர் வசித்து வருகிறார். இவர் அப்பகுதியில் ஆட்டோ டிரைவராக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் காந்தி சிலை அருகே சீனி ஆட்டோவில் சென்று கொண்டிருந்த போது திடீரென ஆட்டோ டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரத்திலுள்ள ஓட்டலுக்குள் புகுந்தது.
இதனைப் பார்த்து அதிர்ச்சியடைந்த அக்கம் பக்கத்தினர் ஆட்டோவையும் சீனியையும் மீட்டுள்ளனர். இந்த விபத்தில் டிரைவர் சீனி லேசான காயத்துடன் உயிர் தப்பியுள்ளார். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.