Categories
தேசிய செய்திகள்

ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து… விபத்தில் 8 பேர் பலி..!!

ஹிமாச்சல பிரதேசத்தில் தனியார் பேருந்து கவிழ்ந்து விழுந்த விபத்தில் 8 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இமாச்சலபிரதேசம் சம்பா மாவட்டம் டீஸார் துணை பிரிவில் இன்று காலை 20க்கும் மேற்பட்ட பயணிகளுடன் தனியார் பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்போது பேருந்து ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த பள்ளத்தில் கவிழ்ந்தது. இந்த விபத்தில் 8 க்கு மேற்பட்டோர் உயிர் இழந்தனர் .11 பேர் சிகிச்சைக்காக மருத்துவனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

விபத்து குறித்து முதலமைச்சர் ஜெய ராம் தாகூர் விசாரணை நடத்த உத்தரவிட்டுள்ளார் .சம்பா மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அருள் குமார் தலைமையிலான குழு விசாரணை தொடங்கியுள்ளது.

Categories

Tech |