பேருந்து கட்டுப்பாட்டை இழந்து ஆற்றில் பாய்ந்த விபத்தில் ஆறு பேர் உயிரிழந்துள்ளனர்.
மேகலாயா மாநிலம், துரா- ஷில்லாங்கிற்கு 21 பயணிகளை ஏற்றி சென்ற பேருந்து மேற்கு காசி மலைப்பகுதி மாவட்ட எல்லையில் நேற்று அதிகாலை வந்தபோது திடீரென தன் கட்டுபாட்டை இழந்து, நோங்சராம் பாலத்திலிருந்து ஆற்றில் பாய்ந்தது. இந்த கோர விபத்தில் பேருந்து ஓட்டுனர் உட்பட 6 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
தகவல் அறிந்து வந்த தீயணைப்பு படையினர் மீட்பு பணியில் ஈடுபட்டனர். படுகாயம் அடைந்தவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பேருந்து வேகமாக வந்ததே விபத்திற்கு காரணம் என தெரியவந்துள்ளது. இந்த விபத்து குறித்து பேருந்தில் பயணம் செய்த பயணி ஒருவர் கூறுகையில், “ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து பாலத்தின் சுவர் மீது மோதி ஆற்றின் உள்ளே பாய்ந்தது”. என கூறியுள்ளார்.