எஸ்டோனியா நாட்டில் முதன்முறையாக ஓட்டுனர் இல்லாமல் ஹைட்ரஜன் கொண்டு இயங்கும் மினிபஸ் அறிமுகமாகியுள்ளது. இந்த வாகனம் ஹைட்ரஜன் மூலம் இயங்குவதால் காற்று மாசுபடாது. ஒருமுறை இதில் ஹைட்ரஜன் புல் டேங்க் செலுத்திவிட்டால் சுமார் 7 மணி நேரங்களுக்கு தடையில்லாமல் பயணிக்கலாம். இந்த மினி பஸ்சில் ஒரே நேரத்தில் ஆறு பேர் பயணிக்கலாம். காற்று மாசுபாட்டை தவிர்க்கும் வகையிலும், நேரத்தை மிச்சப்படுத்தும் வகையிலும் இந்தப் பேருந்து வடிவமைக்கப்பட்டுள்ளது. இது மற்ற நாடுகளிலும் விரைவில் அறிமுகமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Categories