ஓட்டுனர் உரிமம் இல்லாமல் காரை அதிவேகமாக ஓட்டி சென்ற இளைஞருக்கு தண்டனை வழங்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
பிரிட்டனில் லிங்க்கான்ஷிரில் உள்ள ஸ்பல்டிங் அருகிலுள்ள ஒரு சாலையில் கடந்த மார்ச் 8ஆம் தேதி 22 வயதான ட்ரெசி ஹெர்குலிஸ் என்ற நபர் காரை வேகமாக ஓட்டிச் சென்றுள்ளார். அந்த வழியாக வந்த போலீஸ் காரை பார்த்தவுடன் அவர் இன்னும் படுவேகமாக ஓட்டி சென்றுள்ளார். இதனால் சந்தேகமடைந்த போலீசார் அந்த காரை துரத்தி சென்றுள்ளனர். மிக வேகமாக சென்ற அந்த கார் ஒரு பள்ளத்தில் சிக்கி சேற்றில் மாட்டி நின்றது. இதனால் யாருக்கும் எந்த ஒரு ஆபத்தும் ஏற்படவில்லை என்றாலும் மக்களை அச்சுறுத்தும் வகையில் காரை ஓட்டி சென்றதற்காக போலீசார் ஹெர்குலிஸ் மீது வழக்கு பதிவு செய்தது.
மேலும் ஹெர்குலிஸ் லைசென்ஸ் இல்லாத காரணத்தால் காரை வேகமாக ஓட்டி சென்றதாக போலீசில் ஒப்புக்கொண்டார். இந்த வழக்கு தொடர்பாக ஹெர்குலிஸ்க்கு 8 மாதங்கள் சிறை தண்டனையும் அடுத்த 22 மாதங்களுக்கு வாகனம் ஓட்ட தடையும் விதிக்கப்பட்டுள்ளது.