ஓட்டுநர் உரிமம் பெற 3 நாட்கள் தேர்வு ஓட்டுநர் பயிற்சி பள்ளியில் பயிற்சி பெற்று ஓட்டுநர் உரிமம் பெறுபவர்களுக்கு வாரத்தில் இரண்டு நாட்கள் மட்டுமே அனுமதி அளிக்கப்படும் என்று முன்னதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. மற்ற மூன்று நாட்கள் பொது மக்கள் தேர்வில் பங்கு வரலாம் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது இதனையடுத்து அனைத்து வேலை நாட்களிலும் அனுமதி வழங்க வேண்டும் என்று ஓட்டுனர் பயிற்சி பள்ளி உரிமையாளர்கள் சங்கத்தினர் மனு கொடுத்திருந்தனர். சிவகங்கை வட்டார போக்குவரத்து கழக அலுவலகம் மற்றும் காரைக்குடி மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலகம் இரு பகுதிகளிலும் சேர்த்து 47 பயிற்சி மையங்கள் செயல்பட்டு வருகின்றன.
இந்த நிலையில் இந்த உத்தரவால் தங்களுக்கு பாதிப்பு ஏற்படுவதாக போக்குவரத்துத் துறை அமைச்சரிடம் ஓட்டுநர் பயிற்சி பள்ளி உரிமையாளர்கள் கோரிக்கை வைத்த நிலையில், பயிற்சி மாணவர்களுக்கு வாரத்தில் 3 நாட்கள் தேர்வு நடத்த முடிவு செய்யப்பட்டிருப்பதாக போக்குவரத்து ஆணையர் தெரிவித்துள்ளார்.